விஜய் எம்.ஜி.ஆர் மாதிரி செய்கிறார்...மகிழ்ச்சியே!! செல்லூர் ராஜு பாராட்டு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
அதனை தொடர்ந்து, நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு பேசும் போது, ஆட்சிக்கு வந்தால் அனைத்து திமுக துறைகளையும் கைப்பற்றுவது போல சினிமாத்துறையையும் கைப்பற்றி விடுவார்.
அவர்களுக்கு விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு திமுக எதையும் செய்யவில்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டிய செல்லூர் ராஜு. இந்த ஆட்சியில் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை என சாடினார்.
மேலும், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், நடிகர் விஜய் நன்றாக செயல்ப்படுபவர் என கூறி, அவர் கட்சி தொடங்கியது மகிழ்ச்சியே என்றார். அதே போல, சம்பாதித்த பணத்தை எம்ஜிஆரை போல விஜய் மக்களுக்கும் மாணவர்களுக்கும் செலவழிக்க நினைக்கிறார் என குறிப்பிட்டார்.