லண்டனில் அண்ணாமலையை பார்த்துவிட்டேன்..நீங்களும் பாருங்கள் - செல்லூர் ராஜூ கேலி!

London Tamil nadu K. Annamalai Sellur K. Raju Social Media
By Swetha Aug 30, 2024 09:30 AM GMT
Report

அண்ணாமலை லண்டன் சென்றுள்ளதை கிண்டலடிக்கும் விதமாக செல்லூர் ராஜூ வீடியோ பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் சென்றுள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர்.

லண்டனில் அண்ணாமலையை பார்த்துவிட்டேன்..நீங்களும் பாருங்கள் - செல்லூர் ராஜூ கேலி! | Sellur Raju Teases Annamalai By Posting Video In X

அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்காக அண்ணாமலை சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டார். 3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புகிறார்.

போன் ஆடியோ எடுக்க தெரியுது.? அந்த மேதாவி இத எப்படி படிக்காம விட்டாரு - செல்லூர் ராஜு சரமாரி கேள்வி

போன் ஆடியோ எடுக்க தெரியுது.? அந்த மேதாவி இத எப்படி படிக்காம விட்டாரு - செல்லூர் ராஜு சரமாரி கேள்வி

செல்லூர் ராஜூ 

இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ளதை கிண்டலடிக்கும் விதமாகஅதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "தமிழக பாஜகத் தலைவர் திரு அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றதை ஒரு குறும்புக்கார் ஊடகத்தில் இப்படி போட்டு இருக்கார் நான் பார்தேன் நீங்களு பார்ப்பதற்காக!!!

என்று குறிப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில், ஆடுகள் பாடம் படிப்பதை போன்று காட்சியளிக்கிறது. இந்த பதிவில் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.