இப்பாவது தமிழர்களுக்கு நல்லது செய்வீங்களா மோடி? புள்ளிவிவரத்துடன் செல்லூர் ராஜு கேள்வி
3-வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் ஏற்கனவே குற்றசாட்டுகளை வைக்க துவங்கி விட்டனர். எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டுகள் அவர் பதவி விலகவேண்டும் என்ற அளவிற்கு தற்போதே துவங்கி விட்டது.
அதனையெல்லாம் ஒதுக்கி 3-வது முறை நேற்று பதவியேற்ற மோடி, இன்று தனது முதல் கையெழுத்தையும் இட்டுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பெண் ஒருவர், மோடி பதவியில் இருந்த காலகட்டத்தில், புதிதாக தமிழகத்தில் வந்த மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டதை விளக்குகிறார்.
புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி ஜி தலைமையிலான அரசு இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா? திமுக கூட்டணி MP கள் குறல் எழுப்புவார்களா? பார்ப்போம் .!!! pic.twitter.com/YVd1wBoDZk
— Sellur K Raju (@SellurKRajuoffl) June 10, 2024
புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி ஜி தலைமையிலான அரசு இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா? திமுக கூட்டணி MP கள் குறல் எழுப்புவார்களா? பார்ப்போம் .!!!