மோடி 3.O...முதல் கையெழுத்திட்ட பிரதமர்..20 ஆயிரம் கோடிக்கு நிதி உதவிகள்!!
பிரதமர் மோடி 3-வது முறை பதவியேற்றதை தொடர்ந்து முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.
மோடி 3.O
நாட்டின் பிரதமராக 3-வது முறை பதவியேற்று கொண்டுள்ளார் மோடி. நேருவை அடுத்த மூன்று முறை பிரதமராக பதவியேற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ள மோடி 3.O அரசின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.
அவர், அதனை சரியாக கையாளுவார் என பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். கூட்டணி கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு மீது எதிர்பார்ப்பும், எதிர்ப்புகளும் ஒரு சேர உள்ளது.
முதல் கையெழுத்து
இந்நிலையில், 3-வது முறை பதவியேற்றுள்ள மோடி, இன்று தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார். விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தை அவர் இட்டுள்ளார்.
நாடு முழுவதுதிலுமுள்ள 9.3 கோடி விவசாயிகள் பலன் பெறும் பல திட்டங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதியை விடுவிப்பதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
நாட்டின் தலைநகர் டில்லியில் அமைந்துள்ள அலுவலகத்தில் முறைப்படி பதவியேற்றுக்கொண்ட பிறகு, பிரதமரின் விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 17வது தவணையை விடுவிப்பதற்கான ஆவணத்தில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார் மோடி.