3-வது முறை பதவியேற்ற மோடிக்கு வழங்கப்படும் சம்பளம் சலுகைகள் தெரியுமா?
நாட்டின் பிரதமராக 3-வது முறை பதவியேற்றுள்ளார் பிரதமர் மோடி.
மோடி 3.O
வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஏமாற்றம் என்றாலும், மீண்டும் நாட்டின் பிரதமராக கூட்டணி கட்சி ஆதரவுடன் பதவியேற்றுள்ளார் மோடி.
நேற்று இரவு குடியரசு மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பதவியேற்று கொண்டார். அவருடன் சேர்த்து, 72 அமைச்சர்கள் - இணை அமைச்சர்களும் பதவிஏற்றுக்கொண்டனர். பிரதமராக பதவியேற்ற மோடி பெறும் சலுகைகள் என்னென்ன என்பதை அறிவோம்.
சம்பளம் - சலுகைகள் என்ன
இந்தியப் பிரதமருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ. 1.66 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது என்ற தகவல் உள்ளது. சிறப்பு சலுகைகளாக பிரதமர் மோடி உலகிலேயே மிகவும் பாதுகாப்பான கார்களில் பயணம் செய்வார்.
அதே நேரத்தில், ஒரு பிரதமர் ஓய்வு பெற்றவுடன், அவருக்கு இலவசமாக தங்கும் இடம் முதல் அவரின் மருத்துவ செலவுகள் போன்றவையும் இந்திய அரசால் வழங்கப்படுகிறது.
SPG என்ற சிறப்புப் பாதுகாப்புக் குழு பிரதமரின் பாதுகாப்பிற்கு தனிப்பட்ட பணியாளர்களாக இருக்கிறார்கள். நாட்டின் தலைநகரான டெல்லியின் ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைத்துள்ள இல்லத்தில் அவர் வசிக்கிறார்.