அதிபுத்திசாலி ஐபிஎஸ் போன் டேப் செய்ய செய்றாரு - இது முன்னாடியே ஏன் பேசல - செல்லூர் ராஜு

ADMK BJP K. Annamalai Sellur K. Raju Lok Sabha Election 2024
By Karthick Apr 26, 2024 08:14 AM GMT
Report

வாக்காளர் பட்டியலில் பலரின் பெயர்கள் விடுபட்டுள்ளதை அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.

அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவை வேட்பாளருமான அண்ணாமலை, தேர்தல் நாளன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த போது, கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

sellur-raju-questions-annamalai-admk-bjp-tamilnadu

இதே குற்றச்சாட்டை மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வமும் வைத்திருந்தார். தமிழக அரசியல் களத்தில் இந்த செய்தி பெரும் விவாத பொருளாக மாறியது. அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.

படித்து பாஸ் ஆனாரா? பிட் அடித்து பாஸ் ஆனாரா - நாக்கை வெட்டணும் - செல்லூர் ராஜு ஆவேசம்

படித்து பாஸ் ஆனாரா? பிட் அடித்து பாஸ் ஆனாரா - நாக்கை வெட்டணும் - செல்லூர் ராஜு ஆவேசம்

மதுரை மாவட்ட அதிமுக சார்பில் நீர்,மோர் பந்தலை திறந்து வைத்த பின்பு இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியது வருமாறு. வாக்காளர்கள் பலரின் பெயர்கள் பட்டியலில் இருந்து உண்மையிலேயே விடுபட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கு இது என்று சொல்வதா?? தெரியவில்லை.

அதிபுத்திசாலி ஐபிஎஸ்

அனைத்து மாவட்டங்களிலும் இப்படி விடுபட்டுள்ளது. கட்சியினர் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் தடை செய்தது. அதற்கு பதிலாக அரசு பணியாளர்களை பயன்படுத்தியது. இந்த நடைமுறையை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்து அதிபுத்திசாலி ஐபிஎஸ் படித்தவர் தேர்தலுக்கு முன்பே ஏன் பேசவில்லை.

sellur-raju-questions-annamalai-admk-bjp-tamilnadu

பாஜக வாக்காளர்கள் தூக்கப்பட்டு விட்டனர் என சொல்கிறார். தேர்தலுக்கு முன்பே இதனை ஏன் முன்பே தேர்தல் ஆணையத்திடம் அவர் கூறவில்லை. தேர்தலில் தன்னை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் மாற்றி பேசுகிறார். ஊழல் பட்டியல், போனில் ஒருவர் பேசியதை டேப் செய்து வெளியிடும் திறமை படைத்த அண்ணாமலை, இது பற்றி முன்பே சொல்லியிருக்க வேண்டாமா?