கூட்டணி என்றால் நண்பர்கள் - வெளியேறினால் எதிரி தான் - செல்லூர் ராஜு
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு போருக்கு தயாராவதை போல தயாராகுவதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
போருக்கு...
அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலுக்கு போருக்கு தயாராவது போல் அதிமுக தயாராக உள்ளது என்றார்.
இஸ்லாமிய மக்களிடம் பாஜகவின் அண்ணாமலையின் சர்ச்சை பேச்சுக்களால் வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், திமுக எம்.பி.க்களை விட வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற போகும் அதிமுக உறுப்பினர்கள் தான் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பார்கள் என்று உறுதிபட தெரிவித்தார்.
எதிரி தான்...
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் கூட்டணியில் இருக்கும் வரை தான் நண்பர்கள் என்றும் வெளியேறி விட்டால் எதிரிகள் என தெரிவித்து, அதிமுக கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் எனக்கூறினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன தெரிவித்து சென்றார் செல்லூர் ராஜு.