பாஜக தலைமையில் கூட்டணி இல்லை? - சூசகம் தெரிவித்த செல்லூர் ராஜூ

Tamil nadu DMK AIADMK Sellur K. Raju
By Sumathi Aug 08, 2022 01:48 PM GMT
Report

எந்த கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அச்சம்பத்து - புதுக்குளம் பகுதியில் தொகுதி மேம்பாடு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜூ மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

பாஜக தலைமையில் கூட்டணி இல்லை? - சூசகம் தெரிவித்த செல்லூர் ராஜூ | Sellur Raju Press Meet At Madurai

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "2024 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி.தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை ஏற்கும், அதில் மாற்றமில்லை.

 அதிமுக தான் தலைமை

அதிமுக தலைமையின் கீழ் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். மக்களை ஏமாற்றும் நோக்கில் பல பொய்யான தேர்தல் அறிவிப்புகளை வழங்கி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.

பாஜக தலைமையில் கூட்டணி இல்லை? - சூசகம் தெரிவித்த செல்லூர் ராஜூ | Sellur Raju Press Meet At Madurai

நிதி அமைச்சர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டுகிறார். நிதி அமைச்சரை முதலில் மதுரை முழுவதும் ஆய்வு செய்ய சொல்லுங்கள்.கமிஷன் பெறுவதற்காக மாநகராட்சி பணிகளை நிதி அமைச்சர் நிறுத்தி வைப்பதாக திமுகவினரே குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்" என்றார்.

செய்தியாளர் சந்திப்பின் போதும், அதற்கு பின்னரும் அப்பகுதி மக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என அவரை சூழ்ந்து புகார் அளித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.