மதுரையில் தோல்விக்கு இதுவே காரணம் - அத தான் எடப்பாடியார் கேட்டார்? செல்லூர் ராஜு
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தமிழகத்தின் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
மதுரையில் அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியது வருமாறு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டது. நேற்று நடந்த என்கவுண்டரில் கூட சந்தேகம் எழுப்புகிறார்கள். காவல் துறையில் கைகள் கட்டப்பட்டிருக்கிறது.
அன்புமணி காமராஜர் ஆட்சியை கொண்டுவருவோம் என்கிறார். அவரை விட இந்த ஆட்சியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சத்தியமூர்த்தி பவனில் இருந்து பாராட்டுகிறார். அவரை விட அன்புமணி பேசுவதில் ஒன்றுமில்லை. அது வரும் போது பாத்துக்கலாம். பொதுச்செயலாளர் 8000 ஆயிரம் கோடி செலவு செய்தும், ஏன் வாக்கு வாங்கவில்லை என்று தான் கேட்டார்.
நாங்க என்ன புரட்சி தலைவரா? புரட்சி தலைவியா? நாங்கள் கடினமாக உழைத்தோம். மக்கள் மோடி ராகுலில் யார் வர வேண்டும் என வாக்களித்து விட்டார்கள். அதனால் நாங்கள் அடிபட்டு விட்டோம். இங்கு விடவும் வாக்குகள் பல இடங்களில் வாக்கு பெற்றோம். இது அரை பக்கத்தில் போடுற அளவிற்கு செய்தியில்லை.
மதுரை அதிமுகவின் கோட்டை. ஆனால், மக்கள் இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டார்கள்.
அது போன்ற வாக்குகள் தான் இந்த வெற்றிக்கு காரணம். வேறு ஒன்று இல்லை.