8000 கோடி திட்டங்கள் நிறைவேற்றியும் ஏன் தேர்தலில் 3-வது இடம்? செல்லூர் ராஜுவிடம் இபிஎஸ் கேள்வி!
தேர்தல் தோல்வி குறித்து நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில், இபிஎஸ் நிர்வாகிகளிடத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை வைத்து வருவதாக தகவல் வெளிவருகிறது.
தோல்வி
மக்களவை தேர்தல் தோல்வி அதிமுக தரப்பை கலக்கத்தில் வைத்துள்ளது. இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு 2 வருட காலமே இருக்கும் சூழலில், அதற்கு முன்பு இப்படி ஒரு தோல்வி அக்கட்சியை அதிரவைத்துள்ளது.
பல இடங்களில் 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அதிமுக கூட்டணி. அதிமுக ஆதிக்கம் செலுத்தும் தென்தமிழகத்தின் ஒரு தொகுதியான மதுரையிலும் அக்கட்சி 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கேள்வி
ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகிகளிடத்தில் நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசும் நிலையில், கேள்வியையும் பொதுச்செயலாளர் தொடுத்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதற்கும் அதிமுக மாநாடு மதுரையில் தான் நடத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் சுமார் 8000 ஆயிரம் கோடி நலத்திட்டங்கள் அந்நகருக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல் உள்ளது.
இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, செல்லூர் ராஜுவிடம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதாக தகவல் உள்ளது.