அனைவரையும் ஒன்றிணைக்கணும் - 6 மாஜி அமைச்சர்கள் கோரிக்கை - என்ன முடிவெடுப்பார் இபிஎஸ்?
கட்சியில் சசிகலா - ஓபிஎஸ் ஆகியோர் இணைக்கப்படுவார்களா? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
சசிகலா - ஓபிஎஸ்
முன்னாள் முதல்வர், கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் கட்சியில் தற்போது இல்லை. முன்னாள் அமைச்சர்கள் - தற்போதைய மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ'க்கள் மட்டுமின்றி கட்சியின் சின்னம் - கொடி ஆகியவை எடப்பாடி பழனிசாமி வசம் வந்துவிட்டது.
கட்சி எழுச்சியுடன் இருப்பதாக அதிமுகவினர் தெரிவித்து வரும் சூழலிலும், நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது. கட்சியில் மீண்டும் ஓபிஎஸ் - சசிகலா ஆகியோரை இணைக்கவேண்டும் என்ற குரல் அவ்வப்போது எழுகிறது.
குழப்பத்தில் இபிஎஸ்
ஆனால், எப்போதும் அவர்களுக்கு கட்சியில் இடமில்லை என பேசி வருகிறார் பொதுச்செயலாளர். ஆலோசனை தேர்தல் தோல்வி குறித்து நடைபெற்று வரும் சூழலில், கடந்த திங்கள் கட்சியின் மூத்த முன்னாள் அமைச்சர்களில் 6 பேர் நேரில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எல்லோரையும் ஒருங்கிணைப்பது பற்றிப் பேசினார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
அடுத்த தேர்தலில் நா.த.க'வுடன் கூட்டணி வேண்டும்!! கோரிக்கை வைக்கும் நிர்வாகிகள் - என்ன செய்வார் இபிஎஸ்??
கட்சி முக்கியம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இதனை செய்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், செய்தியாளர்கள் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி, ஜானகி ஒதுங்கியதை போல சசிகலா ஒதுங்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் ஒரு துரோகி என பேசியதும் இதில் மிகவும் முக்கியமானதாகும்.
தோல்வியால் தொண்டர்கள் சோர்ந்து போயுள்ளார்கள். மூத்த தலைவர்கள் சிலரும் சற்று குழப்பமான மனநிலையில் தான் இருக்கிறார்கள். ஆனால், தலைமை ஒரு பிடியாக கட்சி சிறப்பாகவே உள்ளது என்றும், ஒருங்கிணைப்பில் அவசியமில்லை என உறுதியாக இருப்பதாகவும் தகவல் உள்ளது.