அரசியல் காமெடியன் அண்ணாமலைக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது; சாடிய செல்லூர் ராஜு!

K. Annamalai Sellur K. Raju Lok Sabha Election 2024
By Swetha Apr 13, 2024 12:30 PM GMT
Report

இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் தேதி நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் களம் சற்று சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

காமெடியன் அண்ணாமலை

அரசியல் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேனீ தொகுதியில் போட்டியிடும் அமமுக பொது செயலாளரான டிடிவி தினகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அரசியல் காமெடியன் அண்ணாமலைக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது; சாடிய செல்லூர் ராஜு! | Sellur Raju Criticized Annamalai

அப்போது அவர், அதிமுக உண்மையான தலைவரான தினகரன் கைக்கு வந்துவிடும் என்று கூறினார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது, திடீர் சமையல் மாதிரி அண்ணாமலை ஒரு திடீர் அரசியல்வாதி. அவருக்கு வரலாறு தெரியாது. அதிமுக என்பது ஆயிரம் காலத்து பயிர்.

எங்கள் இருபெரும் தலைவர்கள் கட்டிக்காத்த கட்சி. 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி.பாஜக ஒரு மதவாத கட்சி. அவர்களுக்கு கொள்கையும் கிடையாது ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. தமிழ்நாட்டுல அவங்க கால் உண்றவே முடியாது.

படித்து பாஸ் ஆனாரா? பிட் அடித்து பாஸ் ஆனாரா - நாக்கை வெட்டணும் - செல்லூர் ராஜு ஆவேசம்

படித்து பாஸ் ஆனாரா? பிட் அடித்து பாஸ் ஆனாரா - நாக்கை வெட்டணும் - செல்லூர் ராஜு ஆவேசம்

 சாடிய செல்லூர் ராஜு

கத்திரிக்காய்க்கு கால் முளைச்ச மாதிரி அப்பப்போ வந்து அண்ணாமலை தலையை காண்பிக்கலாமே தவிர வேற ஒண்ணும் செய்ய முடியாது.லட்சக்கணக்கான கோடி ரூபாயை கடனாக பெற்று வெளிநாடு தப்பிச் சென்ற தொழிலதிபர்களை கைது செய்ய முடியவில்லை, பணத்தை திரும்பப் பெற முடியவில்லை.

அரசியல் காமெடியன் அண்ணாமலைக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது; சாடிய செல்லூர் ராஜு! | Sellur Raju Criticized Annamalai

நிறுவனங்களை மிரட்டி அவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் பெற்று அவர்களுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் செயல்பட்டுவர்கள் தான் இவர்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசும் போது, அண்ணாமலைக்கு நான் பல பதிலடி கொடுத்துட்டேன். அவர் என்ன ஜோசியரா? இல்லை அவர் என்ன விஸ்வாமித்தரரா?

எங்க கட்சி அழிஞ்சு போயிடும்னு சாபமிடுவதற்கு? அவருக்கு அரசியல் தெரியாது. அண்ணா திமுக பீனிக்ஸ் பறவை போன்றது. அண்ணாமலைக்கு கோயம்புத்தூரில் தோல்வி பயம் வந்துவிட்டது. அந்த பயத்தால் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார். காமெடியனாக மாறிக்கொண்டிருக்கிறார்” இவ்வாறு கூறியுள்ளார்..