முதல்வர் கொடைக்கானலில் கூலாக இருக்கட்டும் - நாங்க விமர்சிக்க மாட்டோம்!! செல்லூர் ராஜு
முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுத்து வருகின்றார்.
கொடைக்கானலில் முதல்வர்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுக்க தற்போது கொடைக்கானல் சென்றுள்ளார். தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் நிலையில், முதல்வர் ஓய்வு எடுக்க சென்றுள்ளார்.

அவரின் பயணம் குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அவர் தாராளமாக கொடைக்கானல் சென்று குளுமையை அனுபவித்து வரட்டும், நாங்கள் அதை அரசியலாக்க மாட்டோம் என்றார்.
அவருக்கும் குடும்பம் இருக்கிறது என்று கூறி, ஒரு குடும்பத் தலைவர் என்ற முறையில் அவர் ஓய்வு எடுப்பதில் தவறில்லை என்றார்.

அதே நேரத்தில் கொடநாடு சென்று ஜெயலலிதா ஓய்வு எடுத்தபோது எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி விமர்சனம் செய்தார் என்றும் அவர்கள் போல் நாங்கள் விமர்சனம் செய்ய மாட்டோம் என்று கூறிய செல்லூர் ராஜு, ஓய்வெடுத்து விட்டு திரும்பி வந்து முதல்வர் தனது பணிகளை தொடரட்டும் என்றார்.
Heart Attack Vs Cardiac Arrest: 24 மணி நேரத்துக்கு முன் தெரியும் அறிகுறிகள்- தவற விட்டுறாதீங்க Manithan
Saregamapa: சும்மாவே Finale பர்பாமன்ஸ் கொடுக்கும் சுஷாந்திக்கா! இன்று டைட்டில் வின்னர் ஆவாரா? Manithan