இபிஎஸ் அரைவேக்காடா..? இன்னொரு வாட்டி இப்படி பேசுனா..! செல்லூர் ராஜு எச்சரிக்கை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அரைவேக்காடு என விமர்சித்ததற்கு கடுமையாக அதிமுகவினரால் எதிர்க்கப்படுகிறார் அண்ணாமலை.
செல்லூர் ராஜு விமர்சனம்
இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னால அமைச்சர் சீக்கு ராஜுவிடமும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர் அளித்த பதில் வருமாறு,
அரைவேக்காடு யாரென்று கேட்டால் தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரியும் - அண்ணாமலைதான். நாட்டில் ஆட்சி செய்யும் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற மமதையில், மறைந்த தலைவர்களை மதிக்காமல் பேசும் அவரின் நிலைப்பாடுகளே அரைவேக்காட்டுத்தனமாகத் தான் தெரிகிறது.
அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி - அரசியலில் அவருக்கு என்ன தெரியும்? வாக்குப் பெட்டியை உடைத்த பிறகு தெரியும், அண்ணாமலை தொடருவாரா என்பது. அரசியல் கட்சி என்பது அனைத்து மத, சமூகங்களை அரவணைத்துப் செல்ல வேண்டும், ஆனால் பாஜக ஒரு மதத்தை மட்டுமே முன்னிறுத்துகிறது.
இன்னொரு முறை
மோடிக்கு வந்தது தானா சேர்ந்த கூட்டமா? அழைத்து வரப்பட்டது. அக்கூட்டத்தை பார்த்த மிதப்பில் அண்ணாமலை பேசியுள்ளார். அவருக்கு தமிழக மக்கள் நல்ல பதில் அளிப்பார்கள்.
எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாகப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறோம், இன்னொரு முறை இப்படி பேசினால் அவர் சரியாக வாங்கிக் கட்டிகொள்வார். அண்ணாமலைக்கு அரசியல் தகுதியே இல்லை
இவ்வாறு செல்லூர் ராஜு பேசினார்.