அரைவேக்காடு விமர்சனம் - அண்ணாமலையே தவறை - கொதிக்கும் அதிமுக
எடப்பாடி பழனிசாமியை அரைவேக்காடு என விமர்சனம் செய்தற்கு அண்ணாமலை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.
அரைவேக்காடு
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் மட்டுமின்றி பாஜக ஆட்சி செய்யும் மாநிலத்திலிருந்து 450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர் என்று கூறி, அதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார்? என வினவியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி எதுவுமே புரியாமல் பேசுகிறார் என்பது ஆச்சர்யம், வருத்தம் மட்டுமல்ல, அது நகைச்சுவை என்று கூறி, அவர் அரைவேக்காடு தனமாக பதில் சொல்ல கூடாது என பதிலளித்திருந்தார்.
தவறை அவரே...
அண்ணாமலையின் இந்த கருத்துக்கள் அதிமுகவினரிடம் இருந்து கடும் எதிர்ப்புகளை பெற்று வருகின்றது. இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, இப்படிப்பட்ட விமர்சனத்தின் மூலம், அண்ணாமலை தலைமை பதவிக்கான தகுதி இழந்துவிட்டார் என்று சாடினார்.
பெயருக்கு ஏற்ற மாதிரி அண்ணாமலை அண்ணா போன்றும் இல்லை, ,மலை போன்றும் இல்லை என்று குறிப்பிட்டு, அவர் கூறியதற்கு அவரே தவறை உணர்ந்து கொள்ளும் நிலை வரும் என்றார்.
மேலும், பழனிசாமி மீது விமர்சனம் செய்திருப்பது ஒரு தவறான நடைமுறை என்ற ராஜன் செல்லப்பா, அண்ணாமலைக்கு அதிமுக மட்டுமின்றி, மக்களும் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.