எம்.ஜி.ஆர் போல உதவுறாரு..கனிந்து வந்தால் நல்லது! விஜயுடன் கூட்டணி - உடைத்து பேசிய செல்லூர் ராஜு
நடிகர் விஜய்யுடன் கூட்டணி வைப்பதை குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
செல்லூர் ராஜு பேச்சு
மதுரையில் ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணியை துவங்கி வைத்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு. அப்போது அவர் பேசியது வருமாறு, அதிமுகவின் தொண்டர்களும்,தலைவர்களும் தேர்தலை கண்டு அஞ்சுவதில்லை.
திமுக ஆட்சியில் இருக்கும் போது புதுப்புது யுக்திகளை கண்டுபிடிக்கிறார்கள். எப்படி மக்களை ஏமாற்றி, மயக்கி வாக்குகளை பெற முயற்சிக்கிறார்கள். ஈரோடு கிழக்கில் ஆடு மாடுகளை அடைப்பது போல, மக்களை அடைத்து வைத்து காசு கொடுத்தார்கள்.
ஜனநாயகம் இருக்க போவதில்லை. இப்படி இருக்கிற சூழ்நிலையில், எதுக்கு? செல்வாக்கு கூடிருச்சு'னா என்றால் திமுக நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருக்கணும். மக்களை விலைபேசி வாங்கப்பெற்ற வெற்றி நாடாளுமன்ற தேர்தல் வெற்றி. திமுக கூட்டணியில் இருக்கிறவங்களுக்கு எதுக்கு தனி தனி கொள்கை.
திமுகவிற்கு சவால்..
3 வருடத்தில் எதை குறித்தும் கேட்கவில்லை. ஆனால், ரெண்டு ஆளும் கட்சியையும் அதிகார பலத்தை எதிர்த்து நாங்கள் போட்டியிடும். திமுக ஆட்சியில் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தான் உள்ளது. மக்களை நம்புறோம். மக்கள் தான் எஜமானர்.மக்கள் மனநிலை மாறும். எத்தனையோ தேர்தலை திமுகவே புறக்கணித்துள்ளது.
இப்பவும் சவால் விடுறேன் இனி வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டி என்றால், நாங்களும் நிற்கிறோம். சசிகலா இப்போ கட்சியிலேயே இல்லை.அவுங்க ஆயிரம் சொல்லுவாங்க. கட்சியின் பொதுச்செயலாளரும், துணை பொதுச்செயலாளரும் கரெக்ட்டாக சொல்லிடாங்க.
ஓபிஎஸ் வெளியேறிய பிறகு தோல்வி என்றெல்லாம் சொல்ல கூடாது. அவர் இருக்கும் போதும் தோற்றுள்ளோம். நான் இப்போதும் சொல்கிறேன். தமிழகத்தில் திமுக எங்களுக்கு எதிரி.
கனிந்து வந்தால்...
எங்களை பொறுத்தவரையில் தவறு செய்து விட்டோமோ என்ற ஒன்று உள்ளது. பாஜக ஒரு மதத்திற்கான கட்சியாக இருக்கிறது. தமிழக மக்கள் மதசார்பின்மை இல்லாதவர்கள் தான்.
இதனை வைத்து தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக வளரவே இல்லை. தமிழ்நாட்டிற்கு வரும் போது மதவாதத்தை முன்வைத்தால் அவர்கள் வளரவே முடியாது. ஒரு இளைஞர் புரட்சி தலைவர் மாதிரி முன்வருகிறார். தான் சம்பாதித்தை கொடுக்க வருகிறார். அவர் இனி வரட்டும். அவரோட கொள்கை எல்லாம் சொல்லட்டும்.
அதிமுக இதுவரை யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை செய்யவில்லை.
கனிந்து வந்தால் வரட்டும் நல்லது தான். அண்ணா திமுகவை பொறுத்தவரை நிரந்தர எதிரி திமுக தான்.