ஹாலிவுட் நடிகையை ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொன்ன இந்தியர்; நடிகை கொடுத்த ரியாக்சன் - வைரல் வீடியோ

Hinduism Indian Origin Hollywood Actress
By Karthikraja Nov 01, 2024 02:58 PM GMT
Report

செலினா கோம்ஸை ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொன்ன இந்தியரின் வீடியோ வைரலாகி வருகிறது.

செலினா கோம்ஸ்

செலினா கோம்ஸ் அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற நடிகை ஆவார். நடிப்பதோடு மட்டுமின்றி இவர் பிரபல பாப் பாடகி ஆவார்.

செலினா கோம்ஸ்

சமீபத்தில் செலினா கோம்ஸுடன் இந்தியர் ஒருவர் எடுத்த செல்பி வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

IND vs PAK: மைதானத்தில் பிரபல அமெரிக்க யூடியூபரிடம் அந்த வார்த்தையை முழங்க சொன்ன சிறுவர்கள்!

IND vs PAK: மைதானத்தில் பிரபல அமெரிக்க யூடியூபரிடம் அந்த வார்த்தையை முழங்க சொன்ன சிறுவர்கள்!

ஜெய் ஸ்ரீராம்

செலினா கோம்ஸை சந்தித்த இந்தியர் ஒருவர் அவருடன் செல்பி வீடியோ எடுத்துக்கொள்கிறார். அப்போது அந்த நபர் "ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்" என சொல்லுமாறு கோரிக்கை வைக்கிறார். 

அப்படி என்றால் என்ன என்றே புரியாமல் செலினா கோம்ஸ் இருக்கிறார். அதற்கு அந்த நபர் 'ஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் சிறந்த முழக்கம்' என கூறுகிறார். அப்போதும் ஜெய் ஸ்ரீராம் சொல்லாமல் 'நன்றி' சொல்லிவிட்டு செலினா கோம்ஸ் நகர்ந்து விட்டார். 

இந்த வீடியோ பல்லவ் பாலிவால் என்பவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், நமது பாலோயர்ஸ்களில் ஒருவர் செலினா கோம்ஸை சந்தித்தார். தீபாவளியை முன்னிட்டு அவர் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கூறினார்" என்று பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கண்டனம்

ஆனால் அந்த வீடியோவில் செலினா கோம்ஸ் எங்கும் ஜெய் ஸ்ரீ ராம் என சொல்லவில்லை. இந்நிலையில் அந்த நபரின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வார்த்தையே கேள்விப்படாத ஒருவரிடம் சென்று ஏன் இப்படி கோரிக்கை வைக்க வைத்து அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மதத்திற்கு அவரின் அங்கீகாரத்தை கேட்டு ஏன் இந்தியாவையும், ஹிந்து மதத்தையும் சிறுமை படுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் ஜார்கண்ட்டில் ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார். ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்தவர்கள் மீது நிறைய தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.