ஆளுநரா..? பாஜக செய்தி தொடர்பாளாரா.? தமிழிசைக்கு சேகர் பாபு கேள்வி
தமிழிசை ஆளுநர் பதவியை பார்த்தால் போதும் என அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.
சேகர் பாபு பேட்டி
இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், வெள்ள நிவாரண பணிகளில் திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டதாக என புதுச்சேரி துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, "தமிழிசை செளந்தரராஜன் பாண்டிச்சேரியின் ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும் என சாடி, பாஜகவின் செய்தி தொடர்பாளராக செயல்பட வேண்டாம் என கூறினார்.
ஆளுநர் பதவியை...
அவர்களுக்கு இருக்கின்ற பணியை அவர்களை பார்க்கச் சொல்லுங்கள் என்று தெரிவித்து, அவர்களுடைய எதிர்கால திட்டம், தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுவதுதான் தான் என்றும் நிச்சயமாக எங்கு போட்டியிட்டாலும் தமிழக மக்கள் தோல்வியை தான் பரிசாக தருவார்கள் என்றார்.
மேலும், பாண்டிச்சேரிக்கு உண்டான கவர்னர் அந்த பொறுப்பிற்கு உண்டான பணிகளை மேற்கொண்டால் நல்லது என்று கூறினார் சேகர் பாபு. முன்னதாக வரும் ஜனவரி 15-ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.