திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது - தமிழிசை சௌந்தரராஜன் தாக்கு..!
தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளை கையாளுவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திண்டாடும் மாடலாக மாறிவிட்டது
வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்பினால் தென் மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.மக்களின் வாழ்வாதாரம் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. அரசு மீட்புப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், எதிர்கட்சிகள் பல அரசின் நடவடிக்கைகளை குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், இது குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியது வருமாறு - தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது என்று விமர்சித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்ல என்றும் இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது என்று குற்றம்சாட்டினார். மழை வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.