குறையில்ல'னு தெரியும்..ஆனாலும் சொல்றவங்கள நாங்க கண்டுக்கிறதில்ல - சேகர் பாபு

By Karthick Dec 31, 2023 11:41 AM GMT
Report

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு

தமிழகம் வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்து சென்றிருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு, இதற்கு பதில் அளித்துள்ளார்.


அவர் இது குறித்து பேசும் போது, உள்ளத்தில் இருப்பது தான் உதட்டில் வரும் அது போல அவரின் Idealogy என்னவோ அதைத்தான் அவர் கூறிச்சென்றுள்ளார் என்று தெரிவித்து தமிழ்நாட்டை பொறுத்தவரையில், குறைகளை சுட்டிக்காட்டினால், அதனை நிறைவுசெய்திட வேண்டும் என தமிழக முதல்வர் தங்களிடம் கூறியுள்ளார் என்றார்.

அதுக்காக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம் - வேண்டுகோள் விடுத்த தமிழக முதல்வர்..!!

அதுக்காக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம் - வேண்டுகோள் விடுத்த தமிழக முதல்வர்..!!

தெரிந்தே குற்றமில்லை என்றாலும், குற்றம் - குற்றம் என சொல்பவர்கள் குறித்து தாங்கள் கவலைப்படுவதில்லை என அதிரடியாக கருத்து தெரிவித்த சேகர் பாபு, நிதியமைச்சர் எடுத்துக்கூறிய பெருமாள் சுற்றிவரும் அந்த பாதை இரண்டு நாட்களிலேயே சுத்தம் செய்யப்பட்டது என சுட்டிக்காட்டினார்.

இது தான் திராவிட மாடல்

மேலும், அங்கு வெளியமைக்கும் பணிகள் துவங்கியவுடன் அது பொதுப்பணித்துறைக்கும் - நகராட்சி துறைக்கும் சொந்தமாது என்ற காரணத்தால், அப்பணியை அவர்கள் மேற்கொள்ளவுள்ளார்கள் என தகவல் அளித்த அமைச்சர், இரண்டு நாட்களில் குறை தீர்க்கப்பட்டதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், குறைகள் எங்கிருந்து வந்தாலும்,

sekar-babu-slams-nirmala-sitharaman

அதனை நிறைவு செய்யும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், இந்து சமயஅறநிலைய துறை உருவாக்கப்பட்டதே, கோவில்களில் நாடாகும் தினசரி பணிகள் தொடங்கின்றி நடந்திடவே என சுட்டிக்காட்டி, பணம் உண்டியலில் போட்டால், அதனை Transparency'ஆக செய்வதன் மூலம் தான் கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுகின்றன என்று எடுத்துரைத்தார்.