அதுக்காக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம் - வேண்டுகோள் விடுத்த தமிழக முதல்வர்..!!

M K Stalin Tamil nadu DMK
By Karthick Dec 31, 2023 06:01 AM GMT
Report

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

புத்தாண்டு

நாளை புது ஆண்டு பிறக்கவுள்ளது. பலரும் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை நேரிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை பரஸ்பரம் பரிமாறி வருகின்றார்.

இந்நிலையில், இந்த புத்தாண்டை முன்னிட்டு திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமைக் கழக அறிவிப்பு!

dont-come-to-wish-me-new-year-credits-mk-stalin

அறிவிப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருவதை,

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கட்டாயம் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டள்ளது.