அண்ணாமலை தைரியம் இருந்தால் அதை செய்யட்டும் - அமைச்சர் சேகர் பாபு சவால்
கெட் அவுட் என்ற வார்த்தைக்கு உகந்தவர் பிரதமர் மோடி மட்டுமே என சேகர் பாபு பேசியுள்ளார்.
சேகர்பாபு
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனிப் பகுதியில் பொதுமக்களுக்கு 'அன்னம் தரும் அமுதக்கரங்கள்' திட்டத்தின் கீழ் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காலை உணவு வழங்கினார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், "அண்ணாமலை, அண்ணா சாலையில் எங்க வர வேண்டும் என திமுகவினர் சொன்னால் வர தயார்" என கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
தொட்டுப் பார்க்கட்டும்
அதற்கு பதிலளித்த அவர், "அவர் இன்னும் கர்நாடகாவில் காவல் அதிகாரியாக இருப்பது போல் நினைத்து கொண்டு இருக்கிறார். அண்ணாமலைக்கு தெம்பு, திராணி, தைரியம் இருந்தால் அண்ணாசாலையில் அமைந்திருக்கிற அண்ணா அறிவாலயத்தின் ஒரு செங்கலையாவது தொட்டுப் பார்க்கட்டும்.
இது நெருப்பாற்றில் பயணித்த இயக்கம். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் இல்லை. கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் இப்படி பிதற்றலோடு திரிவதை எந்நாளும் திமுக அனுமதிக்காது. கெட் அவுட் என்ற வார்த்தைக்கு உகந்தவர் பிரதமர் மோடி மட்டுமே" என பதிலளித்தார்.