அப்பாவை கட்டிப்பிடித்து ட்ராமாவா..? சர்ப்ராஸ் கானை மறைமுகமாக விமர்சித்தாரா சேவாக்

Cricket Indian Cricket Team Virender Sehwag
By Karthick Feb 26, 2024 04:15 AM GMT
Report

இந்திய அணியில் இடம்பிடித்ததை இளம் வீரர் சர்ப்ராஸ் கான் மைதானத்தில் தந்தையை கட்டிப்பிடித்து சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

சர்ப்ராஸ் கான்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமாகினார் இளம் வீரர் சர்ப்ராஸ் கான். அறிமுக போட்டியிலே அரை சதத்தை கடந்து அசத்திய அவருக்கு சீனியர் வீரர்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

sehwag-indirectly-slams-sarfaraz-khan

இந்திய அணியில் இடம்பிடித்ததை சர்ப்ராஸ் கான் தனது தந்தையை கட்டிப்பிடித்து மைதானத்தில் நெகிழ்ச்சியாக தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.

sehwag-indirectly-slams-sarfaraz-khan

4-வது டெஸ்ட் போட்டியில், முக்கிய வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேற, இளம் வீரர் துருவ் ஜூரல் மட்டுமே 90 ரன்களை சேர்த்து அசத்தினார்.

65 ஆண்டுகளில் நடக்காத மோசமான சாதனை - இப்போ சர்பராஸ் கான் வசம்..!

65 ஆண்டுகளில் நடக்காத மோசமான சாதனை - இப்போ சர்பராஸ் கான் வசம்..!

அவரை பாராட்டும் வகையில் சேவாக் பதிவிட்டுள்ள கருத்துக்கள், சர்ப்ராஸ் கானை அவர் விமர்சிக்க பயன்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

சேவாக்

ஊடக வெளிச்சம் இல்லை! எந்த டிராமாவும் இல்லை ! வெறும் திறமை மட்டும் தான் இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார். இது சர்ச்சையான நிலையில், அதற்கு சேவாக் விளக்கமும் அளித்துள்ளார்.

sehwag-indirectly-slams-sarfaraz-khan

யாரையும் இழிவுபடுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ அல்ல, ஆனால் மிகைப்படுத்தல் செயல்திறன் மற்றும் சமமாக இருக்க வேண்டும். சில தோழர்கள் அற்புதமாக பந்துவீசியிருக்கிறார்கள், சிலர் விதிவிலக்காக பேட்டிங் செய்திருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்குத் தகுதியான ஹைப் கிடைக்கவில்லை.