65 ஆண்டுகளில் நடக்காத மோசமான சாதனை - இப்போ சர்பராஸ் கான் வசம்..!

Cricket Indian Cricket Team England Cricket Team
By Karthick Feb 16, 2024 04:32 AM GMT
Report

அறிமுக போட்டியில் இந்திய வீரர் சர்பராஸ் கான் அரை சதம் விளாசி ரன் அவுட்டானார்.

டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டை இழந்து 331 ரன்களை குவித்துள்ளது. ரோஹித் சர்மா, ஜடேஜா சதம் விளாசி அசத்த, அறிமுக போட்டியிலேயே இளம் வீரர் சர்பராஸ் கான் அரை சதம் அடித்து ரன் அவுட்டாகினார்.

sarfaraz-khan-run-out-record-in-debut-match

அரைசதம் அடித்து பாராட்டுகளை குவித்து வரும் அதே வேளையில், மோசமான சாதனை அதுவும் 65 ஆண்டுகளில் நிகழாத மோசமான சாதனையை சர்பராஸ் கான் நிகழ்த்தியுள்ளார்.

கொந்தளித்த ரித்திகா - ரோகித் சர்மா மாற்றப்பட்ட விவகாரம் - ஒரே பதிவு - ஆடிப்போன MI அணி..!

கொந்தளித்த ரித்திகா - ரோகித் சர்மா மாற்றப்பட்ட விவகாரம் - ஒரே பதிவு - ஆடிப்போன MI அணி..!

65 ஆண்டுகளில்...

அதாவது அறிமுக போட்டியில் 65 ஆண்டுகளில் இந்திய அணி வீரர்கள் செய்திராத சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். 1959-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்திய அணி அப்பாஸ் அலி, தனது இன்னிங்சில் 112 ரன்களை குவித்து ரன் அவுட்டாகினார்.

sarfaraz-khan-run-out-record-in-debut-match

அவருக்கு பிறகு அறிமுக போட்டியில் 50 ரன்களை சேர்த்த பிறகு ரன் அவுட்டாகிய வீரர் என்ற சாதனை ஒன்றும் சர்பராஸ் கான் வசம் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.