கொந்தளித்த ரித்திகா - ரோகித் சர்மா மாற்றப்பட்ட விவகாரம் - ஒரே பதிவு - ஆடிப்போன MI அணி..!

Rohit Sharma Mumbai Indians
By Karthick Feb 07, 2024 03:02 AM GMT
Report

ரோகித் சர்மாவை கேப்டன்ஷிப் பதவியில் இருந்து நீக்கியது குறித்து அவரது மனைவி ரித்திகா பதிவிட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோகித் மாற்றம்

5 முறை கோப்பையை முமபை அணி வெல்ல, முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா என்றே சொல்லலாம்.

2013-ஆம் ஆண்டிற்கு பிறகு, அதாவது ரோகித் கேப்டனான பிறகு, மும்பை அணி ஐ.பி.எல் போட்டிகளில் பெரும் எழுச்சியை பெற்றது. ஆனால், இந்த ஆண்டிற்கான முமபை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார் .

rohit-wife-rithika-slams-mi-decision-in-captain

இது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரோகித் சர்மாவை மாற்றியதற்கு அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன,. இந்த சூழலில் தான், என் ரோகித் சர்மா மாற்றப்பட்டார் என்று காரணத்தை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மாவை வாட்டும் கெட்ட பழக்கம் - இப்படி ஒரு நபரை பார்த்ததே இல்லை - கோலி பளீச்!

ரோகித் சர்மாவை வாட்டும் கெட்ட பழக்கம் - இப்படி ஒரு நபரை பார்த்ததே இல்லை - கோலி பளீச்!

அதில் அவர் கூறும் போது, ரோகித்தின் பேட்டிங் திறன் அணிக்கு தேவை என்பதால் முழு சுதந்திரத்துடன் அவர் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்பதற்காக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக விளக்கமளித்தார். பேட்டி வைரலாக இது குறித்து ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா பதிவிட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

rohit-wife-rithika-slams-mi-decision-in-captain

மார்க் பவுச்சர்-இன் இந்த பேட்டியில் பல விஷயங்கள் தவறாக இருக்கிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.