ரோகித் சர்மாவை வாட்டும் கெட்ட பழக்கம் - இப்படி ஒரு நபரை பார்த்ததே இல்லை - கோலி பளீச்!

Rohit Sharma Virat Kohli Dinesh Karthik Ajinkya Rahane
By Sumathi Sep 29, 2023 09:58 AM GMT
Report

ரோகித் சர்மாவுக்கு இயற்கையாகவே ஒரு பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது.

ரோகித் சர்மா

வெற்றிகரமான கேப்டன் என பல சாதனைகளை படைத்திருப்பவர் ரோகித் சர்மா. இவருக்கு ஞாபக மறதி அதிகம். தான் வைத்த பொருட்களை எங்கே வைத்தோம் அல்லது எடுத்துக் கொண்டோமா என்பதை மறந்துவிடுவார்.

ரோகித் சர்மாவை வாட்டும் கெட்ட பழக்கம் - இப்படி ஒரு நபரை பார்த்ததே இல்லை - கோலி பளீச்! | Rohit Sharmas Memory Goes Viral

இது குறித்து இந்திய அணி வீரர்கள் பலரும் ரோகித் சர்மாவை கிண்டல் செய்து இருக்கின்றனர். அதிலும் விராட் கோலி, தனது வாழ்க்கையில் ரோகித் சர்மாவை போல் பொருட்களை மறந்து வைத்துவிட்டு பிறகு தேடும் நபரை நான் பார்த்ததே இல்லை என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

ஞாபக மறதி

இதேபோன்று ரகானே, திருமணத்தின் போது ரோகித் சர்மாவுக்கு அவரது மனைவி அணிவித்த மோதிரத்தை ஒரு முறை ரோகித் சர்மா ஹோட்டலில் மறந்து வைத்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்துவிட்டார். அதன் பிறகு அதிர்ச்சியில் உறைந்து போன ரோகித் சர்மா அணியின் மேலாளரிடம் கூறி ஹோட்டலில் இருக்கும் மோதிரத்தை எடுத்து வர சொன்னார்.

ரோகித் சர்மாவை வாட்டும் கெட்ட பழக்கம் - இப்படி ஒரு நபரை பார்த்ததே இல்லை - கோலி பளீச்! | Rohit Sharmas Memory Goes Viral

விமான நிலையத்தில் காத்திருந்த போது மோதிரம் தனது கைக்கு திரும்பிய பிறகு தான் ரோகித் சர்மா இயல்பு நிலைக்கு திரும்பியதாக தெரிவித்தார்.

மேலும் தினேஷ் கார்த்திக், ஒருமுறை டெல்லியில் இருந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு சென்ற போது ரோகித் சர்மா தன்னுடைய பாஸ்போர்ட்டை வீட்டிலே வைத்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். அதன் பிறகு தான் தான் பாஸ்போர்ட் எடுத்து வரவில்லை என தெரிந்து வீட்டிலிருந்து ஒரு நபரை அழைத்து பாஸ்போர்ட்டை வந்து கொடுத்திருக்க சொல்லிருக்கிறார்.

ரோகித் சர்மாவை வாட்டும் கெட்ட பழக்கம் - இப்படி ஒரு நபரை பார்த்ததே இல்லை - கோலி பளீச்! | Rohit Sharmas Memory Goes Viral

அந்த நேரத்தில் மட்டும் பாஸ்போர்ட் வரவில்லை என்றால் ரோகித் சர்மா இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலே கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும் எனக் கூறியுள்ளார். 

யாரு சாமி நீ; மாபெரும் சாதனை படைக்கப்போகும் விராட் கோலி - சச்சினை ஓரம்கட்ட வாய்ப்பு!

யாரு சாமி நீ; மாபெரும் சாதனை படைக்கப்போகும் விராட் கோலி - சச்சினை ஓரம்கட்ட வாய்ப்பு!