கோலி சச்சினை தோளில் சுமந்ததற்கான காரணமே இதுதான் - சேவாக் ஓபன்டாக்
சச்சினை விராட் கோலி தனது தோளில் சுமந்து மைதானத்தை வலம் வந்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
உலகக்கோப்பை
2011 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பின்னர் சச்சின் டெண்டுல்கரை விராட் கோலி தனது தோளில் சுமந்து மைதானத்தை வலம் வந்தார். இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் சேவாக்,
நாங்கள் சச்சினை தூக்கி சுமப்பதை நிராகரித்து விட்டோம். அவர் அதிக கனமாக இருந்தார். எங்களால் தூக்கவே முடியாது. எங்களுக்கும் வயதாகி விட்டது. தோளிலும் காயம் ஏற்பட்டிருந்தது.
சேவாக் ஓபன்டாக்
தோனிக்கு முழங்காலில் பிரச்னை. மற்றவர்களுக்கு வேறு சில பிரச்னைகள் இருந்தன. எனவே சச்சினை தூக்கி சுமக்கும் பொறுப்பை இளைஞர்களிடம் ஒப்படைத்தோம். அப்படித்தான் சச்சினை விராட் கோலி தூக்கி சுமந்ததாக தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ளது. இந்திய அணி ஐசிசி கோப்பை வென்று 12 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.