என்ன சாதிச்சுட்ட..? ஹர்திக் தான் காரணம்; நடவடிக்கை எடுங்க - முன்னாள் வீரர் தாக்கு!

Hardik Pandya Mumbai Indians Cricket Virender Sehwag IPL 2024
By Jiyath May 05, 2024 04:43 AM GMT
Report

மும்பை அணி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். 

மும்பை - கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

என்ன சாதிச்சுட்ட..? ஹர்திக் தான் காரணம்; நடவடிக்கை எடுங்க - முன்னாள் வீரர் தாக்கு! | Sehwag About Mumbai Indians And Hardik Pandya

இந்த போட்டியில் மும்பை அணி 170 என்ற இலக்கை எட்ட முடியாமல் 145 ரன்னில் ஆல்-அவுட்டாகி தோல்வியடைந்தது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி வெறும் 3 வெற்றிகளை மட்டுமே மும்பை அணி பெற்றுள்ளது.

இதனால் ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை அந்த அணி இழந்துள்ளது. இந்நிலையில் மும்பை அணியின் தொடர் தோல்விகளுக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

தோனியின் சுயநலம்? சர்வதேச வீரருக்கு நேர்ந்த கதி - கொதிக்கும் ரசிகர்கள்!

தோனியின் சுயநலம்? சர்வதேச வீரருக்கு நேர்ந்த கதி - கொதிக்கும் ரசிகர்கள்!

என்ன நடந்தது? 

இதுகுறித்து பேசிய அவர் "மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை கடைசியில் பேட்டிங் இறக்கி விட்டு என்ன சாதித்தீர்கள். எதிர்கொள்வதற்கு நிறைய பந்துகள் இருந்தும் அவர்கள் அவுட்டானார்கள்.

என்ன சாதிச்சுட்ட..? ஹர்திக் தான் காரணம்; நடவடிக்கை எடுங்க - முன்னாள் வீரர் தாக்கு! | Sehwag About Mumbai Indians And Hardik Pandya

ஒருவேளை அவர்கள் முன்கூட்டியே களமிறங்கினால் விரைவில் ஆட்டமிழக்கும் அளவுக்கு மோசமான வீரர்களா? குஜராத் கேப்டனாக பாண்டியா 4-வது இடத்தில் தொடர்ச்சியாக விளையாடியுள்ளார். ஆனால், மும்பை அணியில் என்ன நடந்தது? அதில் நான் குழப்பமடைந்துள்ளேன்.

மும்பை அணி நிர்வாகம் இந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கே கேப்டன், பயிற்சியாளர் ஆகியோர் மீதும் தவறு இருக்கிறது. எனவே உரிமையாளர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.