தோனியோட முடிஞ்சு - இனி சிஎஸ்கே...காணாமல் போகும்!! சேவாக் அதிரடி
சென்னை அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதை அடுத்து, தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை - பெங்களூரு அணிகளுக்கே பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மும்பைக்கு சச்சின், ரோகித், பெங்களூரு அணிக்கு விராட் போல சென்னை அணிக்கு முழு முக்கிய காரணம் தோனி மட்டுமே.
2008-ஆம் ஆண்டு விளையாடி வரும் சென்னை அணியும் இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ளது. தோனியின் புகழ் வளர வளர சென்னை அணியின் ரசிகர் பட்டாளமும் பிரமாண்டமானது.
இம்முறை தோனியின் கடைசி தொடராக இருக்கும் என பல கருத்துக்கள் வெளிவரும் நிலையில், சென்னை அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
தோனி இல்லையென்றால் சென்னை அணி என்னவாகும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
சேவாக் கருத்து
இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் இது குறித்து பேசுகையில், மூன்று ஆண்டுகளாகவே தோனியின் ஓய்வு குறித்து பலரும் பேசி வருவதாக கூறி, இருப்பினும் தோனி ஒவ்வொரு முறையும் மீண்டும் ஆட வந்து நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறார் என்றார்.
தன்னை பொறுத்தவரையில் அவர் தனது கடைசி தொடரில் ஏற்கனவே ஆடி விட்டார் என்று சுட்டிக்காட்டி, தற்போது 42 வயதாகும் தோனி இன்னும் ஓராண்டு ஐபிஎல் விளையாடுவது மிகவும் கடினம் என தெரிவித்தார்.
வயதின் காரணமாக ஒரு விரலில் லேசான வலி இருந்தாலும் அவரது முகத்தில் வெளிப்படையாக தெரிந்துவிடும் என்று கூறிய சேவாக், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிக ஆதரவிற்கு காரணம் தோனி தான் என்று சுட்டிக்காட்டி, தோனி ஐபிஎல் தொடரிலிருந்து இருந்து ஓய்வு பெற்று விட்டால் சிஎஸ்கே அணியின் ரசிகர் கூட்டம் பெரிய அளவில் அடிவாங்கும் என தனக்கு தோன்றுவதாக தெரிவித்தார்.
ஆனாலும், கிரிக்கெட் ரசிகர்களிடம் சச்சினை போலவே தோனியின் புகழும் நீடித்திருக்கும் என உறுதிபட கூறி, சச்சினை போலவே தோனியும் மிக பெரிய சகாப்தத்தை விட்டு செல்கிறார் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.