சென்னை தோல்விக்கு காரணமே தோனி தான் - கலாய்த்த தினேஷ் கார்த்திக்
சென்னை அணி நேற்று 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தது.
சென்னை தோல்வி
நிச்சயமாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் போட்டியில் சென்னை அணி டாஸ் ஜெயித்து பௌலிங் தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணி 20 ஓவர்களில் 218/5 ரன்களை குவித்தது. டு பிளேஸிஸ் 54, விராட் 47, ரஜத் படிதர் 41, கேமரூன் கிரீன் 38 ரன்களை குவித்தனர்.
பின்னர் 201 ரன்களை எடுத்தால் playoff வாய்ப்பை உறுதிசெய்து விடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில், சென்னை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்திலேயே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். அணி 19 ரன் எடுத்தபோது மிட்செல் ஆட்டமிழந்தார்.
பின்னர் ரச்சின் ரவீந்திரா, ரஹானே இணைந்து 66 ரன்கள் குவித்த நிலையில், ரஹானே 33 ரன்கள், ரச்சின் ரவீந்திரா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே 7, மிட்செல் சான்ட்னர் 3 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தோனி தான் காரணம்
கடைசியில் சென்னை அணி 191/7 ரன்களை மட்டுமே குவித்தது. தோனி 25 ரன்னில் அவுட்டாக, ஜடேஜா 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி தொடரில் இருந்து வெளியேற, பெங்களூரு அணி Play off சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த போட்டிக்கு பிறகு டிரஸ்ஸிங் ரூம் தினேஷ் கார்த்திக் பேசுகையில், இன்று நடந்த சிறந்த விஷயம் என்னவென்றால், தோனி அந்த சிக்ஸரை மைதானத்திற்கு வெளியே அடித்தார், எங்களுக்கு ஒரு புதிய பந்து கிடைத்தது, அது பந்து வீச மிகவும் சிறப்பாக இருந்தது" என கூறியுள்ளார்.
கடைசி ஓவரில் தோனி அடித்த பந்து 110 m சென்று கிரௌண்ட்டை விட்டு வெளியே சென்றது குறிப்பிடத்தக்கது.