கடைசி போட்டியில் சோகம் - தனிமையில் கண்கலங்கிய தோனி!! வேதனையில் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் சென்னை அணி Playoff வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.
பெங்களூரு பேட்டிங்
வாழ்வா சாவா ஆட்டத்தில் டாஸ் வென்று சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, விராட் மற்றும் டு பிளேஸிஸ் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 78 ரன்கள் சேர்த்த நிலையில் விராட் 47 ரன்னில் அவுட்டாகினார்.
அடுத்தடுத்த வந்த வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 218/5 ரன்களை குவித்தது. டு பிளேஸிஸ் 54, ரஜத் படிதர் 41, கேமரூன் கிரீன் 38 ரன்களை விளாசினார்.
பின்னர் சென்னை அணி playoff வாய்ப்பை உறுதிசெய்ய 201 ரன்களை எடுத்தால் போதும் என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில், சென்னை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்திலேயே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். அணி 19 ரன் எடுத்தபோது மிட்செல் ஆட்டமிழந்தார்.
சென்னை தோல்வி
பின்னர் ரச்சின் ரவீந்திரா, ரஹானே இணைந்து 66 ரன்கள் குவித்த நிலையில், ரஹானே 33 ரன்கள், ரச்சின் ரவீந்திரா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே 7, மிட்செல் சான்ட்னர் 3 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 90 ரன்களும், Play off செல்ல 72 ரன்களும் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா மற்றும் தோனி களத்தில் இருந்தனர்.
தோனி 25 அவுட்டாக, ஜடேஜா 42 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். சென்னை அணி 20 வ ஓவர்களில் 191/7 மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தது. ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி அடுத்து சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது. சென்னை அணி வெளியேறியுள்ளது.
தோனியின் கடைசி தொடர் இதுவாக இருக்கும் என கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அவுட்டான பிறகு அவர், கண் கலங்கிய படி, அமர்ந்திருந்த புகைப்படம் ரசிகர்களை கலங்கவைத்துள்ளது.