நெருங்கும் மக்களவை தேர்தல் - நா.த.க'வில் முக்கிய பதவி பெற்ற கயல்விழி
நாம் தமிழர் கட்சியில் சீமானின் மனைவி கயல்விழி முக்கிய பொறுப்பை பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சி
தொடர்ந்து தேர்தல் அரசியலில் தனித்து போட்டி, தமிழர் - தமிழர் நலனை முன்வைத்து மக்களை சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் வேகமாக வளரும் ஒரு கட்சியாக இருக்கின்றது.
இருப்பினும், தற்போதே இக்கட்சியினுள் பதவி பூசல் ஏற்பட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. இது குறித்து சீமான் கூட மேடை ஒன்றில் தெளிவாகவே பேசியுள்ளார்.
சட்ட ஆலோசகர்
கயல்விழி இது ஒரு புறம் இருக்க, விரைவில் கட்சியில் சீமானின் மனைவி கயல்விழிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படப்போவதாக தகவல் வெளிவந்த வண்ணமே இருந்தன.
அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே, தென்சென்னையின் சட்ட ஆலோசகராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி, கயல்விழி காளிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.