பாலியல் புகார்; நடிகை 7 முறை கருக்கலைப்பு - சீமான் அசால்ட் பதில்!

Vijayalakshmi Tamil Cinema Naam tamilar kachchi Seeman
By Sumathi Feb 23, 2025 05:30 AM GMT
Report

பாலியல் புகாரில், விசாரணை முடிவுக்கு வரட்டும்.. பொறுத்திருங்கள் என சீமான் பதிலளித்துள்ளார்.

பாலியல் புகார் 

நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளரான சீமான் மீது, நடிகை விஜயலட்​சுமி அளித்த பாலியல் புகாரின் பேரில் வளசர​வாக்கம் போலீ​ஸார் கடந்த 2011-ம் ஆண்டு பாலியல் துன்​புறுத்தல் வழக்​குப்​ப​திவு செய்​துள்ளனர்.

seeman - vijayalakshmi

விஜயலட்​சுமியை திரு​மணம் செய்து கொள்​வதாக உத்தர​வாதம் அளித்​துள்ள சீமான். அவருடன் பாலியல் ரீதியாக உறவு கொண்டு திரு​மணத்​துக்கு மறுத்து மிரட்​டலும் விடுத்​துள்ளார். பாலியல் ரீதியாக ஏமாற்றிய​தால் விஜயலட்​சுமி சுமார் 7 முறை கருக்​கலைப்பும் செய்​துள்ளார்.

அது​மட்டுமின்றி விஜயலட்​சுமி​யிட​மிருந்து பெரும் தொகை​யை​யும் சீமான் பெற்றுள்​ளார் எனபுகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இதனால் சீமான் மீதான புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றார்.

ரெட் லைட் ஏரியாவா? இவரெல்லாம் முதிர்ந்த அரசியல்வாதியா - சேகர்பாபு தாக்கு!

ரெட் லைட் ஏரியாவா? இவரெல்லாம் முதிர்ந்த அரசியல்வாதியா - சேகர்பாபு தாக்கு!

சீமான் பதில்

இதற்கிடையில், நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் மனு தாக்கல் செய்தார். தற்போது அந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். அதில், சீமான் மீதான புகாரை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும்; 12 வாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

பாலியல் புகார்; நடிகை 7 முறை கருக்கலைப்பு - சீமான் அசால்ட் பதில்! | Seemans Response Rape 6 Abortions Vijayalakshmi

சீமான் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக பதிலளித்துள்ள சீமான், தமிழர் கட்சியினர் மிரட்டியதால் புகார்களை வாபஸ் பெற்றதாக நடிகை விஜயலட்சுமி சொல்லவில்லை.

நீதிபதிதான் அப்படி சொல்லி இருக்கிறார். விசாரணை இருக்கிறது அல்லவா? விசாரிக்கனும் இல்லையா? விசாரணை முடிவடையட்டும். பொறுத்திருங்க. அதுக்குள்ள அவசரப்படாதீங்க எனத் தெரிவித்துள்ளார்.