பாலியல் புகார்; நடிகை 7 முறை கருக்கலைப்பு - சீமான் அசால்ட் பதில்!
பாலியல் புகாரில், விசாரணை முடிவுக்கு வரட்டும்.. பொறுத்திருங்கள் என சீமான் பதிலளித்துள்ளார்.
பாலியல் புகார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக உத்தரவாதம் அளித்துள்ள சீமான். அவருடன் பாலியல் ரீதியாக உறவு கொண்டு திருமணத்துக்கு மறுத்து மிரட்டலும் விடுத்துள்ளார். பாலியல் ரீதியாக ஏமாற்றியதால் விஜயலட்சுமி சுமார் 7 முறை கருக்கலைப்பும் செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி விஜயலட்சுமியிடமிருந்து பெரும் தொகையையும் சீமான் பெற்றுள்ளார் எனபுகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இதனால் சீமான் மீதான புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றார்.
சீமான் பதில்
இதற்கிடையில், நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் மனு தாக்கல் செய்தார். தற்போது அந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். அதில், சீமான் மீதான புகாரை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும்; 12 வாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சீமான் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக பதிலளித்துள்ள சீமான், தமிழர் கட்சியினர் மிரட்டியதால் புகார்களை வாபஸ் பெற்றதாக நடிகை விஜயலட்சுமி சொல்லவில்லை.
நீதிபதிதான் அப்படி சொல்லி இருக்கிறார். விசாரணை இருக்கிறது அல்லவா? விசாரிக்கனும் இல்லையா? விசாரணை முடிவடையட்டும். பொறுத்திருங்க. அதுக்குள்ள அவசரப்படாதீங்க எனத் தெரிவித்துள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

கர்ப்பப்பை புற்றுநோயால் மனம் தளர்ந்து விட்டீர்களா... தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தை நாடுங்கள் IBC Tamil
