எகிறும் வாக்கு சதவீதம்; பல இடங்களில் 3-வது இடம் - அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும் நாதக?

Naam tamilar kachchi Tamil nadu Seeman Lok Sabha Election 2024
By Jiyath Jun 04, 2024 10:51 AM GMT
Report

தமிழகத்தின் பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் இருந்து வருகிறது. 

மக்களவை தேர்தல் 

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து களம் கண்டது.

எகிறும் வாக்கு சதவீதம்; பல இடங்களில் 3-வது இடம் - அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும் நாதக? | Seemans Naam Tamilar Party 3Rd Place

கடந்த 2016-ம் ஆண்டு முதல் அக்கட்சி தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. அதில் கடைசியாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 7 சதவீத வாக்குகளை நாதக பெற்றது. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவதற்கு குறைந்தது 8 சதவீத வாக்குகள் தேவைப்படுகிறது.

ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்கள் - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை என்ன?

ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்கள் - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை என்ன?

மூன்றாவது இடம் 

அதனை இந்த மக்களவை தேர்தலில் பெற்று அங்கீகாரத்தைப் பெற நாதக முயன்று வருகிறது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நிலவரப்படி, நாகப்பட்டினம், திருச்சி, கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் இருந்து வருகிறது.

எகிறும் வாக்கு சதவீதம்; பல இடங்களில் 3-வது இடம் - அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும் நாதக? | Seemans Naam Tamilar Party 3Rd Place

மேலும், பெரும்பான்மையான இடங்களில் 4வது இடத்தில் இருந்து வருகிறது. இதனால் அக்கட்சியின் வாக்கு சதவீதம் கணிசமாக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இம்முறை நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.