முடிவான கூட்டணி!! ரகசிய சந்திப்பு - கைகோர்க்கும் சீமான் - விஜய்!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரும் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நா.த.க - த.வெ.க
இன்றைய இளைஞர்களை ஈர்க்கும் அரசியல் தலைவராக இருக்கும் சீமான், சினிமா கவர்ச்சியுடன் அரசியலில் கால் பாதிக்கும் விஜய் இருவருமே கூட்டணி அமைப்பார்களா? என்று நீண்ட காலமாக கேள்வி இருந்து வருகின்றது.
சீமான், நடிகர் விஜய்யை தாக்கி பேசினாலும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை பெரிதாக விமர்சிக்கவில்லை. ஆனால் கூட்டணி பேசவில்லை. விஜய் அரசியலுக்கு வரும் உச்சபட்ச நோக்கம் முதல்வர் நாற்காலி தான். சீமான் தரப்பிலும் அந்த எண்ணம் அதிகளவில் தான் உள்ளது. இருவரும் எப்படி கூட்டணி அமைப்பார்கள் என்பது கேள்விக்குறியான விஷயமே.
மக்களவை தேர்தல் விஷயங்களில் அமைதி காத்த விஜய், 2026-ஆம் சட்டமன்ற தேர்தலுக்காக தனது வேலைகளை விரைவில் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தான் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ரகசியமாக சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக எதிர்ப்பு வாக்குகளை கைப்பற்ற தான் இக்கட்சிகள் போட்டியிடுகின்றன. அதே நேரத்தில் அதிமுகவிடம் ஒரு சின்ன சாப்ட் கார்னர் காட்டுகிறார் சீமான். தமிழக அரசியலுக்கு வந்த முதலில் எதிர்க்கவேண்டியது திராவிட கட்சிகளை தான். விஜய் இரு திராவிட கட்சிகளையும் எதிர்பார் என்றே தெரிகிறது.
இந்த நிலையில், இவர்களின் சந்திப்பில் கூட்டணி குறித்து பேசப்பட்டிருக்குமா? கூட்டணி என்றால் 117 என பிரித்து கொள்வார்கள். முதல்வர் யார்? துணை முதல்வர்? என்ற பல கேள்விகள் உள்ளன.
இன்னும் 2 ஆண்டுகளே இருக்கும் நிலையில், விரைவில் இது குறித்து நாம் அறிந்து கொள்ளலாம்.இது தொடர்பாக பத்திரிகையாளர் வாராகி பேட்டி ஒன்றிலும் பேசியுள்ளார்.