6 கிராமங்களுக்கு பேராபத்து.. கேரளா போல் தமிழகத்திலும் பேரழிவு நடக்கும் - எச்சரிக்கை விடுத்த சீமான்!

M K Stalin DMK Seeman
By Vidhya Senthil Sep 03, 2024 11:05 AM GMT
Report

கன்னியாகுமரி மாவட்டம் செறுகோல் மலைக்குன்றை உடைத்துக் கனிமவளங்கள் கடத்தப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

கனிமவளங்கள்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகில் செறுகோல் ஊராட்சிக்கு உட்பட்ட இயற்கை எழில்கொஞ்சும் பகுதியான கிழங்குவிளை, புலையன்விளை, கொழிஞ்சிவிளை, காவுவிளை, கடமனங்குழிவிளை, மேடவிளை என 6 கிராமங்களில் ஏறத்தாழ 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

seeman

இப்பகுதியிலுள்ள மலைக்குன்று ஊர்மக்கள் வாழ்வாதாரமாகவும், வேளாண்மைக்கு ஆதாரமாகவும், நீரோடைகளின் பிறப்பிடமாகவும், நிலத்தடி நீர்மட்டத்தைத் தக்க வைக்கும் காரணியாகவும், காடுகள் வளர ஏதுவான பகுதியாகவும், விலங்குகள், பறவைகளின் சரணாலயமாகவும் விளங்குகிறது.

நான்குவழிச்சாலைப் பணிகளுக்கு என்று கூறி இக்குன்றை உடைத்து மண் மற்றும் பாறைகளைப் பெயர்த்து எடுக்க டிடிகே கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் ( TTK Constructions) என்ற நிறுவனம் உண்மைக்குப் புறம்பான சில ஆவணங்கள் மூலம் ஏறத்தாழ 10 ஏக்கர் நிலப்பரப்பிற்கு அனுமதி பெற்று  சாலை அமைக்கும் பணிகளைத் தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

31 நாட்களில் 133 படுகொலைகள்...என்ன பாதுகாப்பு இருக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு - சீமான்!

31 நாட்களில் 133 படுகொலைகள்...என்ன பாதுகாப்பு இருக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு - சீமான்!

இந்த மலைக்குன்றிலிருந்து 300 மீட்டருக்குள் அதிகப்படியான குடியிருப்புகள், நீர்நிலைகள், விவசாய விளைநிலங்கள், வழிபாட்டுத்தலங்கள், சாலைகள் போன்றவை அமைந்துள்ளதால் பாறைகள் உடைக்கும்போதும், மண் எடுக்கும்போதும் நிலச்சரிவு ஏற்படும் பேராபத்தான சூழல் உள்ளது.

 சீமான்

மேலும், வீடுகளும் அதிர்வால் பிளவுறும் சூழல் ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் சீர்கேடு, காற்று மாசு ஏற்பட்டுப் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு உட்படப் பல நோய்கள் வரவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி கனிமவளங்களைக் கடத்த அதிகனரக வாகனங்கள் இயக்குவதால் வீடுகள், குறு சாலைகள் சேதமடையவும் வாய்ப்புள்ளது.

6 கிராமங்களுக்கு பேராபத்து.. கேரளா போல் தமிழகத்திலும் பேரழிவு நடக்கும் - எச்சரிக்கை விடுத்த சீமான்! | Seeman Urges Stop The Smuggling Of Minerals

அண்மையில் கேரளாவில் மிகப்பெரிய மண்சரிவு நிகழ்ந்து அதனால் பேரழிவு ஏற்பட்டதைப்போல, தமிழ்நாட்டிலும் நிகழ வாய்ப்பிருப்பதாக புவியியல் அறிஞர்கள் எச்சரித்துள்ள நிலையில், இனியும் மலைகளை உடைத்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு அனுமதிக்குமாயின் அது வருங்கால தலைமுறைக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு இவ்விடயத்தில உடனடியாகக் கவனம் செலுத்தி, செறுகோல் மக்களின் வாழ்வாதரமாகவும் இயற்கை அரணாகவும் திகழும் மலையை உடைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.