அம்மாவுக்கு மகனாக ஆறுதல்; என் அரசு அமையும்போது அதை செய்வேன் - அஞ்சலி செலுத்திய சீமான்!
பங்காரு அடிகளார் நினைவிடத்தில் சீமான் அஞ்சலி செலுத்தினார்.
பங்காரு அடிகளார் மறைவு
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின், அவரது மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து இதுகுறித்து பேசுகையில், “பங்காரு அடிகளார் தற்பொழுது நம்முடன் இல்லை. அவர்கள் குடும்பத்தினர் என் மீது தனிப்பட்ட முறையில் அன்பு பாசம் காட்டுகின்றனர்.
சீமான் அஞ்சலி
நான் இவர்கள் குடும்பத்தாரிடம் தினந்தோறும் நலம் விசாரிப்பேன். எதிர்பாராத இந்த சம்பவம் விபத்து போல ஆகிவிட்டது. உடல் நோய்வாய் பட்டு இருந்திருந்தால் கூட இந்த வலி இருக்காது. நான் மகனாக வந்து அம்மாவுக்கு ஆறுதல் கூறினேன்.
இவருடைய ஆன்மீகம் அறக்கட்டளையாகவும், கல்வியாகவும், மருத்துவமாகவும், அன்னதானமாகவும் வளர்ந்து நிற்கிறது. இது பல ஆண்டுகாலம் இந்த ஆன்மீகத் தொண்டு நிலைத்து நிற்கும்.
எனது அரசு அமையும். இவர் ஆன்மிக தொண்டு குறித்து அரசு சார்பில் நான் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.