சாகப்போவதாக முன்பே சொன்னார்..நாங்கதான் போலீசில் பிடித்து கொடுத்தோம் - சீமான் ஆவேசம்!
கைதான சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் ஆவேசம்
கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி வந்தவர் நாதக முன்னாள் நிர்வாகி சிவா என்ற சிவராமன். இவர் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, அப்போது தப்பி ஓட முயன்றபோது அவர் காலில் அடிபட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில், காவல்துறை விசாரணைக்கு பயந்து, எலி பேஸ்ட் சாப்பிட்டதாக சிகிச்சையின் போது சிவராமன் வாக்குமூலம் அளித்திருந்தார்.
நாங்கதான்..
இந்நிலையில் சிகிச்சையில் இருந்த சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் சிவராமன் உயிரிழப்பு தொடர்பாக கிருஷ்ணகிரி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது தொடர்பக கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,
“சிவராமன் கொஞ்ச காலத்திற்கு முன்பே சாகப்போகிறேன் என வருத்தம் தெரிவித்து எனக்கு கடிதம் எழுதியிருந்தார். கட்சித் தம்பிகளிடம் அதைக் கொடுத்து விசாரிக்கச் சொன்னேன். தவறு செய்தது தெரிந்ததும், அவரை போலீசில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் தம்பிகள்தான்.
குற்ற உணர்ச்சி இருந்ததால்தான் தற்கொலை செய்துள்ளார். மகன் செய்த தவறால் அடைந்த மனவேதனையில் அப்பாவும் மதுபோதையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதில் எந்த சந்தேகமும் இல்லை, இதன் பின்னணியில் யாரும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.