பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - கைதான முக்கிய குற்றவாளி உயிரிழப்பு!
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி உயிரிழந்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி வந்தவர் நாதக முன்னாள் நிர்வாகி சிவா என்ற சிவராமன். இவர் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டது.
அதன் அடிப்படையில் அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அப்போது தப்பி ஓட முயன்றபோது அவர் காலில் அடிபட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குற்றவாளி உயிரிழப்பு
இதற்கிடையில், காவல்துறை விசாரணைக்கு பயந்து, எலி பேஸ்ட் சாப்பிட்டதாக சிகிச்சையின் போது சிவராமன் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்நிலையில் சிகிச்சையில் இருந்த சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது கடந்த மாதமும் குடும்ப பிரச்சினை காரணமாக எலி மருந்து சாப்பிட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் தெரியவந்துள்ளது.