திமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டே மது ஒழிப்பு மாநாடு..இதில் என்ன புண்ணியம்? சீமான்!

Thol. Thirumavalavan Tamil nadu ADMK Seeman Kallakurichi
By Swetha Sep 12, 2024 02:48 AM GMT
Report

மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை விசிக அழைத்து என்ன பயன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மது ஒழிப்பு மாநாடு 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபர் 2-ம் தேதி விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. விஷச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து போத மக்கள் வைத்த கோரிக்கை மதுபான கடைகளை அரசு மூட வேண்டும்,

திமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டே மது ஒழிப்பு மாநாடு..இதில் என்ன புண்ணியம்? சீமான்! | Seeman Talks About Anti Alcohol Conferrence By Vck

சாராய கடைகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் மதுவிலக்கு கோரி மாநாட்டை விசிக நடத்துகிறது. மாநாட்டில் கலந்துகொள்ள அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை விசிக அழைத்து என்ன பயன்? அதிமுக ஆட்சியிலும் மது விற்பனை செய்யப்பட்டது.

அண்ணன் தம்பி பாசம்;விஜய்யின் படமும், மாநாடும் சிறக்க வாழ்த்துகிறோம் - சீமான்!

அண்ணன் தம்பி பாசம்;விஜய்யின் படமும், மாநாடும் சிறக்க வாழ்த்துகிறோம் - சீமான்!

சீமான்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் மது விற்கப்படும். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு மது ஒழிப்பு மாநாடு நடத்தி என்ன புண்ணியம்? மது ஒழிப்பு என்ற திருமாவளவனின் நோக்கம் வரவேற்கத்தக்கது. ஆனால் கூட்டணி வைக்கும் போது மது ஒழிப்பு குறித்து வலியுறுத்தினார்களா?

திமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டே மது ஒழிப்பு மாநாடு..இதில் என்ன புண்ணியம்? சீமான்! | Seeman Talks About Anti Alcohol Conferrence By Vck

மதுவுக்கு எதிராக ஒரே அணி அமைத்து தேர்தலை சந்திப்போமா? ஒரே அணியில் மதுவுக்கு எதிராக கொள்கையை முன்வைத்து தேர்தலை சந்திக்க தயாரா? டாஸ்மாக்கில் மது விற்பனை குறைந்தால், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் ஆட்சியுடன் கூட்டணி வைத்துகொண்டு,

மதுவை ஒழிக்க போராடி என்ன பயன்? திருமாவளவன், யாருடன் கூட்டணியில் இருந்து கொண்டு மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். எனக்கு 5 ஆண்டு வாய்ப்பு தாருங்கள். மீனவர்கள் கைது செய்யப்பட்டால் மறுநாளே பதவி விலகுவேன். என்று தெரிவித்துள்ளார்.