டாஸ்மாக்கில் தீர்த்தமா விக்கிறாங்க? கள் குடித்து சீமான் ஆதரவு - புதிய பெயர் வைக்கனுமாம்..
கள் விடுதலை மாநாட்டில் பங்கேற்ற சீமான், ஆதரவு தெரிவித்துள்ளார்.
கள் விடுதலை
விழுப்புரம், பூரிக்குடிசை பகுதியில் கல் விடுதலை மாநாடு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ள்ளுக் கடைக்கு அனுமதி அளித்தால் டாஸ்மாக் வியாபாரம் குறைந்து விடுமோ என்று அச்சத்தில் தமிழக அரசு கள்ளுக்கு தடை விதித்துள்ளது. தேசிய பானமான கள்ளுக்கு தமிழகத்தை தவிர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அனுமதி இருக்கிறது.
கள்ளுக்கடைகளை திறக்க அரசு ஏன் மறுக்கிறது? வேளாண்மை போல் இதுவும் ஒரு விவசாயம்தான் டாஸ்மாக் கடைகளில் அரசு மது விற்பனை செய்கிறது. ஆனால் கள் பானத்தை தடை செய்கிறது. கள் பதநீர் இறக்க அனுமதி வழங்க வேண்டும். கள் என்ற பெயர் தான் பிரச்சனையெனில் அதை பணைபால் மூலிகை சாறு என கூறலாம்.
சீமான் ஆதரவு
தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறந்து வைத்தால் சட்டம் ஒழுங்கு எப்படி சரியாக இருக்கும்? ஒரே நாளில் நூறு வழக்குகளை வாங்கியவன். வடிவேலு சொல்லுவது போல் சிறைப்பறவை நான். ஈரோடு இடைத்தேர்தலில் பெரியார் பெயரை சொல்லியும் பெரியார் பேசியதே கூறியும் ஓட்டு வாங்க வேண்டியது தானே?
இந்த திராவிடம் அரியணை ஏற பீஹாரிய பார்ப்பனர் பிரசாந்த் கிஷோர் ஆரியரே தேவைப்படுகிறார். தற்போது ராபின் சர்மாவை அழைத்து வந்துள்ளீர்கள். அவர் ஆரியர் இல்லையோ? நீங்கள் மேலே ஏறுவதற்கு பார்ப்பனர்களின் மூலை தேவைப்பட்டது. நாங்கள் ஆரியர்களை எதிர்த்தால் மதவாதமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பண ஓலையில் கல் அருந்தி தனது ஆதரவை தெரிவித்தார்.