அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்: அரசுக்கு வெட்கமாக இல்லையா? சீமான் சாடல்

Tamil nadu DMK Seeman
By Sumathi Jan 16, 2025 04:01 AM GMT
Report

சந்தேகத்தின் பேரில் கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.

அமைச்சர் விவகாரம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகள், கால்நடைகள்,

seeman

விளைவித்த பயிர்கள் என அனைத்தையும் இழந்து வாழ்வா-சாவா நிலையிலிருந்த மக்களை உரிய நேரத்தில் சந்தித்து துயர்துடைப்பு உதவிகள் செய்யாத தமிழ்நாடு அரசின் மீதான அறச்சீற்றத்தின் வெளிப்பாடாக யாரோ ஒருவர் அமைச்சர் மீது சேற்றினை வீசியதற்காக,

வன்மம் கொண்டு, ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு, அப்பாவி கிராம மக்கள் அனைவரையும், பொங்கல் விழாவினைக்கூட நிம்மதியாக கொண்டாடவிடாமல் குரூர மனப்பான்மையுடன் கைது செய்து சிறையிலடைப்பது என்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

100 கோடி சொத்துக்கள் முடக்கம் - அதிர்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

100 கோடி சொத்துக்கள் முடக்கம் - அதிர்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

 சீமான் கண்டனம்

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த கொடூரர்களை இரண்டு ஆண்டுகளாகியும் கண்டுபிடிக்க திறனற்ற தி.மு.க அரசு, அமைச்சர் மீது சேறு வீசியதற்காக அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா?

சேறு வீசியவர்களை கைது செய்ய இத்தனை வேகம் காட்டும் தமிழ்நாடு காவல்துறை அதில் நூற்றில் ஒரு பங்கு வேகத்தையாவது குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் ஏன் காட்டவில்லை?. இதுதான் தி.மு.க அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா?

இதுதான் திராவிட மாடல் அரசின் இந்தியா வியக்கும் சாதனையா?. ஆட்சி அதிகாரம் கையிலிருக்கும் மமதையில், ஆணவப்போக்குடன் தி.மு.க அரசு மேற்கொள்ளும் கொடுங்கோன்மைச் செயல்கள் அனைத்திற்கும் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஆகவே, வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவேல்பட்டு கிராம மக்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்ம் என குறிப்பிடப்பட்டுள்ளது.