ஆளுநர் தமிழினத்தையே அவமானப்படுத்தி விட்டார் - கொதிக்கும் செல்வப்பெருந்தகை

R. N. Ravi Governor of Tamil Nadu K. Selvaperunthagai
By Karthikraja Jan 15, 2025 07:30 PM GMT
Report

ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளார்.

திருவள்ளுவர் தினம்

தமிழ்நாடு அரசு சார்பில் திருவள்ளுவர் தினம், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (15.01.2025) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. 

rn ravi celebrate saffron thiruvalluvar

ஆளுநர் மாளிகையில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில் காவி உடையில் திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

காவி உடையில் திருவள்ளுவர்

காவி உடையிலான திருவள்ளுவர் படத்தை பயன்படுத்தியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அய்யன் திருவள்ளுவருக்கு சாதி, மொழி, மதம் என்பது கிடையாது. அவருக்கு காவி உடை அணிந்து, சித்தரிப்பது ஏற்க முடியாது. 

selvaperunthagai

ஆளுநர் ரவி, அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து வெளியிடுவது சட்டத்துக்கு புறம்பானது. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படி செய்வது கண்டனத்துக்குரியது. வருத்தத்துக்குரியது.

தமிழ்நாடு அரசை மட்டுமல்ல, தமிழனத்தையும், திருவள்ளுவரையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.