எல்லாம் விளம்பர அரசியல் தான் செய்றாங்க - திமுக, பாஜகவை விளாசிய சீமான்!
திமுக மற்றும் பாஜக குறித்து சீமான் பேட்டி அளித்துள்ளார்.
சீமான்
திருவெறும்பூரில் பல நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமானத்தில் திருச்சி வந்து இறங்கினார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியுள்ளார், அதில் அவர் திமுக மற்றும் பாஜக குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், " இந்த 9 ஆண்டுகளில் பாஜக எந்த சாதனைகளும் செய்யவில்லை. அதானியை வளர்த்து விட்டதை தவிர வேறு என்ன செய்தார்கள். எல்லா அரசு சொத்துக்களையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்தது" என்று கூறினார்.
பேட்டி
இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "தி.மு.க. மற்றும் பா.ஜ.க.விடம் மக்களுக்கான சேவை அரசியல் கிடையாது, செயல் அரசியலும் கிடையாது. செய்தி அரசியல் மட்டுமே செய்கிறார்கள்.
அவர்களுக்கு அவர்களே விளம்பரம் செய்து கொள்கிறார்கள், அதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள்" என்று கூறினார். மேலும், "செப்டம்பரில் மகளிர் உரிமை தொகை கொடுக்க உள்ள நிலையில், அதனை தற்போதிலிருந்து விளம்பரம் செய்து வருகிறார்கள்.
மாநிலங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது போன்று ஆளுநர் பேசிக் கொண்டிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.