சிவனும் சாதி பாகுபாடு பார்த்தாரா? சீமான் சர்ச்சை பேச்சு

Seeman Lord Shiva
By Karthikraja Sep 13, 2024 04:30 PM GMT
Report

இறைவனுக்கும் சாதி பாகுபாடு இருந்ததா என சீமான் பேசியுள்ளார்.

நந்தன்

நடிகர் சசிக்குமார், பிக்பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ள நந்தன் திரைப்படம் செப்டம்பர் 20ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

seeman speech nanthan audio launch

இன்று நடந்த இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். 

விஜய் உடன் கூட்டணி இல்லை; நாம் தமிழர் தனித்து போட்டி - சீமான் அதிரடி

விஜய் உடன் கூட்டணி இல்லை; நாம் தமிழர் தனித்து போட்டி - சீமான் அதிரடி

சீமான்

இந்நிகழ்வில் பேசிய அவர், இந்த நிகழ்ச்சியை இசை வெளியீட்டு விழாவாகப் பார்ப்பதை விடப் பல நூறு ஆண்டுகளாக இந்த மண்ணின் மக்கள் பட்ட வலியை வெளிப்படுத்தும் விழாவாகவே பார்க்கிறேன். இந்தப் படத்தில் முதல் காட்சியிலிருந்தே என் தம்பி சசியை மறந்துவிடுவீர்கள். கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். 

seeman speech

இதில் சமுத்திரக்கனியின் கேரக்டர் என்னைப் பொறாமைப்பட வைத்தது. என் கதாபாத்திரத்தில்தான் அவர் நடித்திருக்கிறார். நந்தன் எரிக்கப்பட்ட போது அவனின் கதறலின் சில சிதறல்கள்தான் நந்தன் படத்தின் கதையாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறைவனுக்கும் சாதி பாகுபாடு

63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனை மட்டும் கோவிலில் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கோவிலின் வெளியே இருந்து நந்தன் சிவபெருமானை தரிசிக்க முயன்ற போது, சிவனை மறைத்துக் கொண்டிருந்த நந்தியை சிவபெருமான் ஒதுங்க செய்து தன்னை நந்தன் தரிசிக்க வழி செய்தார் சிவன்.

நந்தியை நகர்த்தி தரிசசனம் கொடுத்த சிவன், நந்தா உள்ளே வாடா என்று ஏன் கூப்பிடவில்லை என்ற கேள்வி இங்கு யாருக்கும் எழுவது இயல்புதான். அப்பொழுது இறைவனுக்கும் சாதி பாகுபாடு இருந்ததா என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விதான் தற்போது நந்தன் படமாக உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.