ஒலிவாங்கி என்று சொன்னால் மக்களுக்கு புரியாத நிலை உள்ளது - சீமான் ஆதங்கம்!

Seeman Kanyakumari Lok Sabha Election 2024
By Swetha Mar 29, 2024 03:19 AM GMT
Report

கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்துள்ளார்.

சீமான் பேச்சு

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபருக்கு ஆதரவாக வகிக்க சேகரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

ஒலிவாங்கி என்று சொன்னால் மக்களுக்கு புரியாத நிலை உள்ளது - சீமான் ஆதங்கம்! | Seeman Speech In Kanyakumari For Candidate

அப்போது பேசிய அவர், எவ்வளவு நெருக்கடிகள், அழுத்தங்கள் கொடுத்தாலும் அவர்கள் கொடுக்கும் அழுத்தங்கள் எங்களை ஆவேசப்படுத்தும், அரசியல் படுத்துமே தவிர அச்சப்படுத்தாது. சிதைந்து கொண்டிருக்கும் தமிழ் மொழியை நீட்சித்து எடுக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம்.

அடம்பிடித்து தொகுதியை மாற்றிய வேட்பாளர்; ஜெயிக்கலைன்னா செத்துரு..சீமானின் கட்டளை!

அடம்பிடித்து தொகுதியை மாற்றிய வேட்பாளர்; ஜெயிக்கலைன்னா செத்துரு..சீமானின் கட்டளை!

ஒலி வாங்கி 

பல ஆண்டு காலமாக நம் தாய்மொழி சிதைந்து, அழிந்து கொண்டிருப்பதை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். எங்கள் சின்னத்தை கூட ஒலிவாங்கி என்று கூறினால் மக்களுக்கு புரியாத ஒரு நிலைமை, மைக் என்று சொல்ல வேண்டி உள்ளது.

ஒலிவாங்கி என்று சொன்னால் மக்களுக்கு புரியாத நிலை உள்ளது - சீமான் ஆதங்கம்! | Seeman Speech In Kanyakumari For Candidate

காங்கிரஸ், பா.ஜ.க. நம் மொழிக்காக, உரிமைக்காக நின்றுள்ளார்களா? தாய் மொழியில் வழக்காடும் உரிமை கூட நம் இனத்திற்கு கிடையாது. இலங்கை கடற்படையினர் எத்தனை படகுகளையும், மீனவர்களையும் கைது செய்தார்கள்? அதற்கு ஒரு தீர்வு கொண்டு வந்தது உண்டா? என தெரிவித்துள்ளார்.