பாலியல் இச்சையை தாயுடன் தீர்த்து கொள்ள சொன்னாரா பெரியார்? சீமான் பேச்சால் சர்ச்சை
பெரியார் குறித்து சீமான் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீமான்
கடலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதில் பேசிய அவர், தமிழ் மொழியை குப்பை, சனியன் என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார். உலகின் ஆகச்சிறந்த பொதுமொழியான திருக்குறளை மலம் என கூறினார் பெரியார். கம்பர், இளங்கோவடிகள், திருவள்ளுவர் போன்றோரை எதிரிகள் எனக் கூறினார்.
பெரியார்
பாலியல் இச்சை தோன்றினால் உன் தாயுடனோ, சகோதரியுடனோ உறவு வைத்து தீர்த்து கொள் என பேசினார் பெரியார். இதுதான் பெண்ணிய உரிமையா? தன் தோட்டத்தில் இருந்த 1000 தென்னை மரங்களை வெட்டினார். அவர் பகுத்தறிவாளர் தானே, என் தோட்டத்தில் கள்ளு இறக்க அனுமதி இல்லை என்று சொல்லியிருந்தால் போதுமே எதற்கு மரங்களை வெட்ட வேண்டும். இது பகுத்தறிவா?
சரி மது விலக்கிற்கு எதிராக போராடினார் என வைத்துக்கொள்ளலாம். உலகில் எந்த நாட்டில் மது இல்லை. அனைவரும் மது அருந்துகிறார்கள். மது குடிக்க வேண்டாம் என்பது, கட்டிய மனைவியுடன் படுக்க வேண்டாம் என்று சொல்வதற்கு சமம் என்று சொல்லியிருக்கிறாரா? இல்லையா?
சமூகநீதிக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? சமூக நீதியை போராடி பெற்றுக் கொடுத்தவர் ஆணைமுத்துவா அல்லது பெரியாரா? அவரை எப்படி கொள்கை வழிகாட்டியாக ஏற்க முடியும்?" என பேசினார். சீமானின் பெரியார் குறித்த பேச்சுக்கு திமுக, விசிக மற்றும் பெரியாரிய அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.