ஆளுநர் தமிழ்நாட்டை விட்டே வெளியேறலாம் - சீமான் கண்டனம்
உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்துபோட்டதற்கு நீங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும் என சீமான் பேசியுள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஆளுநர் சட்டசபையை விட்டு வெளியேறியதற்கு பதிலாக தமிழ்நாட்டை விட்டே வெளியேறலாம்.
தமிழ்நாட்டில் சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்பட்டும். அதன் பின்னர் தான் தேசிய கீதம் பாடப்படும். தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்பதை ஏற்க முடியாது. ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் போது நியமன உறுப்பினருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்?
தமிழ்த்தாய் வாழ்த்து
பபாசி என்பது அரசு அமைப்பு இல்லை. அது ஒரு பொது அமைப்பு. எங்களின் கட்சி நிகழ்ச்சிகளில் வேறு ஒரு தமிழ்த்தாய் வாழ்த்து தான் ஒலிபரப்புகிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தில் 10க்கும் மேற்பட்ட வரிகளை நீங்கள் ஏற்கனவே எடுத்துவிட்டீர்கள். ஆனால் நான் பாட்டையே எடுத்து விட்டேன்.
தமிழ்த்தாய் வாழ்த்தில் எங்கிருந்து திராவிடம் என்பது வருகிறது. திராவிடம் என்பது என்ன மொழி? நான் அதிகாரத்துக்கு வந்தால் பாவேந்தர் பாரதிதாசன் பாட்டை தமிழ்த்தாய் வாழ்த்தாக போடுவேன். தூய தமிழில் உள்ள தமிழ்த்தாய் வாழ்த்தை தானே பாடினோம். இந்தி, இங்கிலீஷ் வாழ்த்துப் பாடலையா இசைத்தோம்?
மன்னிப்பு
இப்படி நடக்கவேண்டுமென்று தெரிந்துதான் அந்த நிகழ்ச்சி நடந்திருக்கு, இல்லையென்றால் என்னை ஏன் அவர்கள் கூப்பிடவேண்டும். நான் சென்ற பிறகு 'கலைஞர் கின்னஸ்’ எனும் நூல் வெளியிடப்பட்டது. அதில், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்று அரசியல்தான் பேசினார்கள். ஆனால், நான் பேசியதுதான் இவர்களுக்கு பிரச்சனை.
நான் பேசி இந்த அளவுக்குக் கூட பிரச்சனையாகவில்லை என்றால் நான் எதற்கு அரைநாள் செலவழித்து சென்று பேச வேண்டும். மன்னிப்பு கேட்கும் ஆளா நான்? தூய தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு நீங்கள்தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்" என பேசினார்.