உப்புமா கம்பெனி திட்டமா? காலையில் 5 நாட்களும்.. திமுகவை மோசமாக சாடிய சீமான்!
காலை உணவு திட்டத்தை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காலை உணவு திட்டம்
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்படி, மொத்தம் 1,545 பள்ளிகளில் 1,14,095 மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
சீமான் காட்டம்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட கட்சிகள் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தும் காலையில் சாப்பிட்டுவிட்டுக் கூட வர முடியாத அளவுக்கு நமது பிள்ளைகளை வறுமையில் வைத்திருக்கிறீர்களா? இது என்ன தமிழ்நாடா?
இல்லை சோமாலியாவா? கென்யாவா? அல்லது நைஜீரியாவா? தமிழ்நாட்டில் தான் எல்லா வளமும் இருக்கிறதே. அப்புறம் என்ன? அப்படியே பார்த்தாலும் காலை உண்வுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு பாலும், முட்டையுமா கொடுக்கிறார்கள்?
வாரத்தில் 7 நாட்களில் 5 நாட்கள் உப்புமா தான் போடுகிறார்கள். நீங்கள் உப்புமா கம்பெனி தான் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் எனத் தெரிவித்துள்ளார். தற்போது இந்த பேச்சுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.